நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புக்குள் நுழைந்து பறவைகளை வேட்டையாடும் மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உதகை மெயின் பஜார் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மர்மநபர்கள் உண்டி வில் வைத்து பறவைகளை வேட்டையாடினர்.
இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கை வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குடியிருப்புப் பகுதி என்பதால் வீட்டின் கண்ணாடி சேதமடைவதாகவும், சில சமயங்களில் பொது மக்களும் இதில் தாக்கப்படுகின்றனர் எனவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.