கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பணமோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் நிஜில் பிரேம்சன் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பெட்ரோல் பங்கில் இருக்கும் பார்கோடுகளை அதன் உரிமையாளர் சோதனை செய்தார்.
அப்போது பார் கோடுகள் நிஜில் பிரேம்சன் வங்கியின் கோடுகள் என்பதும் இதன் மூலம் 23 லட்சத்து 39 ஆயிரத்து 727 ரூபாய் மோசடியாக நிஜில்லுக்கு கிடைத்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மோசடி நபரான நிஜில்லை போலீசார் கைது செய்தனர்.