தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, வனத்துறையைக் கண்டித்து, அரசு பேருந்தை சிறைபிடித்து, மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை உள்ளிட்ட 23 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் நிலையில், மலை கிராம மக்கள் அனைவரும் வெளியேறுமாறு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலைக் கிராம மக்கள், சோத்துப்பாறை அணைப் பகுதியில், அரசுப்பேருந்தைச் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.