நாடு முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர் தினம் ,இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், பாடல்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், வாழ்த்து அட்டைகள், பூங்கொத்து கொடுப்பது மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள்,அரசியல் கட்சிதலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இளம் மனதை வடிவமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி” என கூறியுள்ளார்.