வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ; பாரத தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்கு வகித்த பெருமகனார், அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று.
இந்திய மக்களின் சுயசார்பு திறனை வெளிக்கொணரும் விதமாக, தனது சொத்துக்களை விற்று, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து “சுதேசி நீராவிக் கப்பல்” நிறுவனத்தின் மூலம் வாணிபம் தொடங்கிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
தனது தீவிரமான சுதந்திரக் கொள்கையை பாமர மக்களிடத்தில் கொண்டு சென்று விடுதலை உணர்வளித்து வாழ்ந்தார். இந்திய மக்களின் விடுதலைக்காக, செக்கிழுத்தச் செம்மல்,கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினத்தில், அவர்களது தியாகத்தை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.