ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ; “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வேபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை, ஆண்டுதோறும் “தேசிய ஆசிரியர் தினமாக” கொண்டாடி வருகிறோம்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகித்து வரக்கூடிய ஒவ்வொரு தனிமனிதனையும் செதுக்குகின்றவர்களாக ஆசிரியர்கள் திகழ்ந்து வருகிறார்கள்.
அதன்படி, இந்த அற்புதமான ஆசிரியர் தின நன்னாளில், பள்ளிக் காலம் முதல் இன்றைய நாள் வரை, எனக்கு வழிகாட்டிகளாக இருந்த மற்றும் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும் தெரிவி்த்து கொள்கிறேன். தேசம் முழுவதும் இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பார்ந்த ‘ஆசிரியர் தின’ வாழ்த்துகள்” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அவர் விடுத்துள்ள ஆடியோ பதிவில்,
மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வது ஆசிரியர்களின் மிகப்பெரிய பணி என்றும், நாட்டை உருவாக்குகின்ற, வழிநடத்துகிற மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார். ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருந்து மாணவர்களை தேசத்தின் மிகப்பெரிய பதவிகளுக்கு உயர்த்துவதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.