தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நடத்துநர் பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தசாமி என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி, தனது மனைவியுடன் பொட்டல்புதூர் நியாய விலைக்கடையில் இலவச ரேஷன் அரிசி வாங்கிக்கொண்டு, அரசு பேருந்தில் பாவூர்சத்திரம் திரும்பியுள்ளார். அப்போது, ரேஷன் பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்கவேண்டும் என்று நடத்துநர் கூறியுள்ளார்.
அதற்கு, அவர் தனது மாற்றுத்திறனாளி பாஸை காட்டியபோதும், கண்டு கொள்ளாமல் நடுரோட்டில் அவரையும், அவரது மனைவிையும் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அவ்வழியே சென்றவர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உடனடி நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.