திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தையில் மின் விளக்குகள் எரியாததால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா எல்லைப் பகுதியில் இருந்து அதிக அளவில் விவசாயிகள் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் உழவர் சந்தையில் மின் விளக்கு எரியாததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் பெயரளவில் மட்டுமே உழவர் சந்தை நடைபெற்று வருவதாகவும் விவசாயிகளுக்கு வியாபாரிகளுக்கும் பாதுகாப்பாற்ற முறையில் உழவர் சந்தை செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.