சுதந்திரப் போராட்டத்தில், சுதேசி வேள்வியை ஊட்டியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “இந்திய சுதந்திரப் போராட்டத்தில், சுதேசி வேள்வியை ஊட்டிய, கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று. சிறந்த வழக்கறிஞராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தவர்.
தேச விடுதலைக்காக, தனது உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்தவர். கடுமையான சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர். தமது இறுதி மூச்சு வரை, சுதந்திரத்துக்காகப் போராடியவர். செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவைப் போற்றி வணங்குவோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.