தெலங்கானாவில் பெய்த கனமழையால் 50, 000 மரங்கள் வேருடன் சாய்ந்தன.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் தலா 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் மேடாரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தட்வாய் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 50,000 மரங்கள் வேருடன் சாய்ந்தன.