கும்பகோணம் ஸ்ரீ விஜேந்திர தீர்த்த சுவாமிகளின் மடத்திற்கு, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் வராக தேசிங்க சுவாமிகள் வருகை தந்தார்.
அவருக்கு விஜயேந்திர மடத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மடத்தில் உள்ள கசபதி தீர்த்த குளத்தில் இறங்கி பக்தர்களுக்கு தீர்த்தங்களை தெளித்து அருளாசி வழங்கினார்.
பின்னர், மடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணர் பொம்மைகளை பரிசாக வழங்கினார்.