ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து குன்றி மலை கிராமத்திற்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது அரசுப் பேருந்தை காட்டு யானை ஒன்று வழிமறித்ததால் அச்சத்தில் பயணிகள் கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்றதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.