விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மாட்டுச் சாணத்தில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.