வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : தொலைநோக்கு தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் தேசம் நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துகிறது.
பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனித்துவ கட்டுப்பாட்டை மீறி சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை அவர் நிறுவினார்.
அவரது துணிச்சல், புதுமை படைக்கும் மனப்பாங்கு, வலிமையான, தன்னம்பிக்கை மற்றும் #சுயசார்புபாரதம் பார்வையை நாம் கொள்வதற்கு தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கின்றன என அளுநர் ரவி தெரிவித்துள்ளர்.