அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.