சர்வதேச சூரியசக்தி திருவிழாவையொட்டி, 1 கோடி வீடுகளில் சூரியசக்தி மேற்கூரை நிறுவ இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
முதல் சர்வதேச சூரியசக்தி திருவிழா கொண்டாடப்படும் நிலையில், காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் இதுவரை நூறு நாடுகள் இணைந்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் சூரியசக்தி திறன் 32 மடங்கு அதிகரித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
இதே வேகத்தில் சென்றால், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நமது இலக்கான 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தியை அடைந்துவிடலாம் என பிரதமர் மோடி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.