விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மதுரை மாவட்டம், தவுட்டுச்சந்தையில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்தியும், கூச்சலிட்டபடியும் ரகளை செய்தனர்.
இவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் அதிக ஒலி எழுப்பியபடி நகரை வலம் வருவது பொது மக்களிடையே முகச்சுழிவை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மேலராஜ வீதியில் உள்ள விஜய் திரையரங்கில் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் ஆகியும் சரி செய்ய முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கூச்சலிட்டபடி ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையே அடுத்தடுத்த காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.