தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம் ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து, அவரது வழிகாட்டுதலை பெற்றோம். கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப் பட்டத்தை அடுத்து, அமித்ஷா அவர்களை சந்தித்தேன். கட்சியில் மாநில நிர்வாகிகள் பொறுப்பை மாற்றுவதில் என்ன அவசரம்?
6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை கட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனை கடந்து தான் பொறுப்புகள் நியமிக்கப்படும்.
தமிழகத்தில் கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பதில் அளித்த H ராஜா, எப்போதும் அடுத்தவரின் சாதனைகளை தன் முதுகில் தட்டிக் கொள்வது திமுகவின் இயல்பு. . தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நிறைய வித்தியாசம் இருப்பது ஏன்? 1000 மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை கூட தொடவில்லை ஏன்?
ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகிதம் கல்லூரியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 2 கல்லூரிகளில் 0 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் தான் உள்ளது. . துறை சார்ந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மொழி பேதங்களை உருவாக்கி பிற்போக்கு கொள்கையை செயல்படுத்துகிறார்கள்.
மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் என மாற்றியதே பிரதமர் மோடி ஆட்சி தான். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் 3 வது மொழி படித்தால் ஹிந்தி உள்ளே வந்துவிடும் என பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பல குழந்தைகள் படிக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்தது விடுமோ என பயந்துகொண்டு படுகிறார்கள். மரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. ஆனால் PM shree திட்டம் மூலமாக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட பள்ளிக்கூடங்கள் வழங்கப்படுகிறது. அதனை ஏன் கொடுக்கவில்லை என பேசுவதற்கு பதில் நீங்கள் கையெழுத்து போடாததே தான். கையெழுத்து போடுங்கள் PM shree பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருகிறோம் என ஹெச். ராஜா தெரிவித்தார்.