ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு குழந்தைக்கும் அறிவு தீபம் ஏற்றி, நாட்டின் தூண்களாக உருவாக உறுதுணையாக இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும், இனிய ஆசிரியர் தின வாழ்த்து எனக் கூறியுள்ளார்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற நறுந்தொகை பாடலுக்கேற்ப, ஒவ்வொரு குழந்தையையும் சிறந்த மனிதனாக வடிவமைத்து, உலகிற்கு வழங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு, என்றும் நன்றி உரித்தாகுக என அந்த செய்தியில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.