தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பேசினார்.
அப்போது புதிய கல்வி கொள்கை நடை முறை படுத்துவது தொடர்பான விவாதம் தேவையில்லை, ஏற்கனவே பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது/ பல இடங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாக கூறிய அவர், 60 சதவீத மாணவர்களால் எண்களையும், 40 சதவீதத்தினரால் எழுத்துக்களையும் படிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விநியோகம் நடப்பது கவலையளிப்பதாக ஆர்.என்.ரவி தெரிவித்தார். இதனை தடுக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ஆர்.என்.ரவி கூறினார்.