கன்னட நடிகர் தர்ஷன், தன்னுடைய ரசிகர் ரேணுகாசுவாமியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக ரேணுகாசுவாமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ரேணுகா சுவாமியை தர்ஷன் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததும், அவர் சாவதற்கு முன் பவித்ரா கவுடா சரமாரியாக தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.