இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீடு சீனாவை விட அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பங்குச்சந்தைகளின் மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது :, இந்திய மதிப்பீடு கடந்த 2020-ம் ஆண்டு 9.2 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது 19.8 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும், அந்நிய பங்கு முதலீடு அதிகரித்துள்ளதால்தான் விகித அளவு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
, நடப்பாண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் 53 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் எனவும், இந்திய சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் 5.5 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது எனவும் மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் உலக அளவில் 10 டிரில்லியன் டாலருடன் 2-ம் இடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா விரைவில் முந்தும் எனவும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.