பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலமாக 3 நாட்களில் 1 கோடி பேர் பாஜகவில் இணைந்தனர்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமது உறுப்பினர் அட்டையையும் புதுப்பித்துக் கொண்டார்.
45 நாட்கள் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களில் பாஜகவில் 1 கோடி பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக-வின் எக்ஸ் தளப்பதிவில், நம்ப முடியாத இலக்கை எட்டி இருப்பதாகவும், இது வெறும் ஆரம்பம் தான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.