விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் விநாயக பெருமான், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருளினார். மேலும், சண்டிகேஷ்வரர் எழுந்தருளிய திருத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.