ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி தலா இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்தில் 22.42 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 125.67 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 1.06 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். தரிசனம் டோக்கன் பெற்று வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டு வழங்கப்படும் (ஒரு லட்டு 50 ரூபாய் வீதம்) என்றும் அவர் கூறினார்.
திருப்பதி அல்லாது தேவஸ்தானத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள உள் மாநிலம் மற்றும் வெளி மாநில கோவில்களில் லட்டுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றும், லட்டுகள் தரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விரைவில், நெய்யின் தரத்தை சரிபார்க்க, சொந்தமாக ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். அலிபிரி நடைபாதையில் திவ்யதர்ஷன் டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.