விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி தின விழாவை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலக வளாகத்தில் ஏழு அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காலை முதலே கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு விநாயகருக்கு தேங்காய், பழம், கொலுக்கட்டை உள்ளிட்டவை படையலிடப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
நீலகிரி தொகுதி பாஜக பொறுப்பாளர் நந்தக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.