லக்னோவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் 3 அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் மோட்டார் பட்டறை கிடங்கு, மருத்துவ குடோன் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், லக்னோவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.