இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை insider.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பெறலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.