கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.
கென்யாவின் நெய்ரி நகரில் அமைந்துள்ள ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் பயின்று வந்தனர். இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.