கோட் படத்தில் சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான காட்சியை மாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் செல்போன் திருடும் கதாபாத்திரத்திற்கு சுபாஷ் சந்திர போஸ் பெயரை வைப்பதா? என கேள்வியெழுப்பியுள்ளார். இது இயல்பான கிண்டலாக இருந்தாலும் சுதந்திரத்திற்காக போராடிய சுபாஷ் சந்திர போஸ் பெயரை இழிவுப்படுத்துவதாக உள்ளது என ஏ.என்.எஸ்.பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸ் புகழை கெடுப்பது மன்னிக்க முடியாத தவறு என்பதை நடிகர் விஜய்யும், படக்குழுவும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கோட் படத்தில் வரும் செல்போன் திருடன் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.