மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாப்படுகை கிராமத்தில் சுமங்கலி காளியம்மன் மற்றும் பாதாள காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த ஐந்தாம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
இந்நிலையில், , மேள தாளங்கள் முழங்க எடுத்துவரப்பட்ட புனித நீர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாதாள காளியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.