அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் - மாணவன் சுட்டதில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பலி!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் – மாணவன் சுட்டதில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 03:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது கோல்ட் கிரேவின் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.  கோல்ட் கிரே யின் தாயும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் பலமுறை வீட்டு வன்முறை குற்றங்களுக்காக கைதானவர் என்றும் தெரிய வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 14 வயதுடைய கோல்ட் கிரே என்னும் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 மாணவர்கள் உட்பட 2 ஆசிரியர்கள் கொல்லப் பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனை கைது செய்துள்ள ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின் இயக்குனர் கிறிஸ் ஹோசி, கோல்ட் கிரே மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இவ்வூரில் உள்ள பள்ளிகளில்  துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என  ஆன்லைன் அச்சுறுத்தல்கள் பல வந்துள்ளன. அப்போது கோல்ட் கிரே சட்ட அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

துப்பாக்கிகளின் புகைப்படங்களை உள்ளடக்கிய குறிப்புக்களுடன் வந்த மிரட்டல் பற்றி கோல்ட் கிரேயின் தந்தையிடம் நடத்திய தீவிர விசாரணையில் வேட்டையாடும் துப்பாக்கி வீட்டில்உள்ளதாக தெரிவித்திருக்கிறார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமலாக்கத் துறையினர் கோல்ட் கிரேயை அப்போது கைது செய்யவில்லை.

கடந்த கிறிஸ்துமஸ் பரிசாக தன் மகனுக்கு AR-15 வகை அரை தானியங்கி துப்பாக்கியை வாங்கி கொடுத்திருக்கிறார் கோல்ட் கிரேயின் தந்தை கொலின் கிரே. அந்த துப்பாக்கியைக் கொண்டு, பள்ளியில் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறான் கோல்ட் கிரே.

தனது மகனுக்குத் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதித்தது உட்பட நான்கு தன்னிச்சையான ஆணவக் கொலைகள், இரண்டு இரண்டாம் நிலை கொலைகள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டுக் கொடுமைகள் உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொலின் கிரே கைது செய்யப் பட்டுள்ளார். இரண்டாம் நிலை கொலை குற்றத்துக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில் , துப்பாக்கி சூடு நடத்திய கோல்ட் கிரேயின் தாயான 43 வயதான மார்சி ,வீட்டு வன்முறை, போதைப்பொருள் வைத்திருந்தல், சொத்து சேதம் மற்றும் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து மீறல்கள் உட்பட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைதாகி இருக்கிறார்.

மேலும் அவர் பயன்படுத்திய வாகனம் வாங்குவதில் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் குழந்தை யாரையாவது சுட்டுக் கொன்றால், பெற்றோர்கள் பொதுவாக குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் என்றாலும், எதிர்காலத்தில் பெற்றோரும் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

கடந்த நவம்பரில் வர்ஜீனியாவைச் சேர்ந்த தேஜா டெய்லருக்கு, அவரது ஆறு வயது மகன் ஜனவரி மாதம் தனது ஆசிரியரை சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த 385வது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு மட்டும் 384 வெகுஜன துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. அதன் விளைவாக 11,500 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

Tags: americashootingGeorgia high schoolColt Gray arrest
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறை பாதாள காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Next Post

மதுரை சிம்மக்கல் சந்தையில் வளர்ப்பு பிராணிகள் விற்பனை – ஆர்வத்துடன் வாங்கி சென்ற வாடிக்கையாளர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies