வார விடுமுறையை ஒட்டி மதுரை மாவட்டம், சிம்மக்கல் அருகே நடைபெற்ற சந்தையில் வளர்ப்பு பிராணிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
படித்துறை பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் குருவிகள், புறா, பூனை, வெள்ளை எலி, மீன்வகைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
காலை முதலே நடைபெற்ற இந்த சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல் , விருதுநகர், உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வளர்ப்புப் பிராணிகள் கொண்டு வரப்பட்டது.
செல்லப்பிராணிகள் மட்டுமில்லாது அவற்றிற்கான உணவுப் பொருட்கள், கூண்டு வகைகள், மீன் தொட்டி உள்ளிட்டவையும் விற்பனைக்கு சந்தைபடுத்தப்பட்டது. இதில் புறா வகைகள் 200 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சேவல் வகைகள் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.