டெல்லி வந்துள்ள அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபுதாபி பட்டத்து இளவரசருடன் அந்நாட்டின் அமைச்சர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர்.