தமிழகத்தில் கணினி மற்றும் மடிக்கணினி தொழிற்சாலையை நிறுவ ஹெச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுதொடர்பான விவரத்தை வெளியிட்ட அவர், பிரதமர் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஒருபகுதியாக உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், தமிழகத்தில் கணினி மற்றும் மடிக்கணினிகளைத் தயாரிக்க ஹெச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக கூறினார்.
இது பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் முக்கியமான மைல் கல் என்று கூறிய அவர்,
இதன்மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்றுமதி நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்.பி. நிறுவனம் முன்னிலை வகிக்கிறது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
முதற்கட்டமாக இந்நிறுவனத்தில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறிய அவர், உற்பத்தி பெருகும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.
அந்த வகையில் ஹெச்.பி. நிறுவனத்தில் தயாராகும் முதல் மடிக்கணினி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.