அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியின் வெளிபாடு, ராகுல் காந்தியின் பேச்சில் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயன்றது என்று கூறியுள்ள அவர், மக்கள் மத்தியில் உண்மை தெரியவந்ததால், காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக குறிப்பிட்டார்.
3-வது முறையாக பிரதமர் மோடிக்கு வலுவான ஆதரவை இந்திய மக்கள் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது ஊழல் எதிர்கட்சிகளுக்கும், இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுக்கும் பதிலாகும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என சாடியுள்ள அவர், உலகளவில் இந்தியாவுக்கு எதிரான பொய்களையும் அவதூறுகளையும் ராகுல் காந்தி தொடர்ந்து பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், RSS மற்றும் பாஜகவின் கொள்கைகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருதாக கூறியுள்ள அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தெரிவித்துள்ளார்.