உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக சுற்றித்திரியும் ஆட்கொல்லி ஓநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். பக்ரைச் மாவட்டத்தில் கரேதி குருதத் சிங் கிராமத்தில் சுற்றித்திரிந்த 6 ஓநாய்கள் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கிராமத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த ஓநாய்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், 4 ஓநாய்களை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில், பக்ரைச் பகுதியில் சுற்றித்திரிந்த 5வது ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்துள்ளனர்.
இதுவரை 5 ஓநாய்கள் பிடிப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு ஓநாயை விரைவில் பிடிப்போம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பிடிப்பட்ட ஓநாயை வன காப்பகத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.