திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களின் வழிபாடு 3 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து சிலைகள் அனைத்து கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட சிலைகள் அனைத்து காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.