விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுவதால், நாளை புதுச்சேரி நகரில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
இதனால், அண்ணா சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாகனங்களும் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது.