திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த தம்பதி மணிகண்டன், தமிழரசி. இவர்களது மூன்று வயது குழந்தை, மூடாமல் வைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.
இதனையறியாமல் ஒரு மணி நேரமாக குழந்தையை தேடிய நிலையில், தொட்டியில் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.