சுனாமி, பூகம்பத்தால் உயிரிழப்பவர்கள் கெட்டவர்கள் என கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏ ஐயப்பன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து பள்ளியின் வகுப்பறைக்கு சென்ற எம்எல்ஏ ஐயப்பன், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது மாணவர்களிடம், கெட்டவர்கள் மட்டுமே சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளில் உயிரிழப்பவர்கள் என்றும், நல்லவர்களுக்கு இது போன்ற பேரழிவுகளால் எந்த பாதிப்பும் வராது எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இது குறித்த வீடியோ வைரலான நிலையில் ஐயப்பனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.