மறைந்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடலுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரம ராஜா அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளையனின் மறைவு வணிகர்களின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வெள்ளையனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், பெரம்பூரில் அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.