திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காதலனை மட்டும் போலீசார் கைது செய்ததாக புகார் எழுந்துள்ளது.
லால்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி சிலம்பரசன் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது தாயுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்த நிலையில் சிலம்பரசனை மட்டும் போலீசார் கைது செய்தனர்.
இதனால் பிற இளைஞர்களை கைது செய்யாமல் ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.