நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை தன்னிச்சையாக எடுத்ததாக அவரது மனைவி ஆர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளான நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து ஜெயம் ரவியே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், தன் நடத்தையின் மீது களங்கம் விளைவிக்கும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.