இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்டுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சிம்லாவின் சஞ்சவுலி தல்லி சுரங்கப் பாதை அருகே சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை எனக்கூறி மசூதிக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில்,போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி சஞ்சவுலி தல்லி சுரங்கப் பாதையில் மக்கள் குவிந்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.