சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் தடுப்பு சுவரில் மோதி நின்ற சுற்றுலா பேருந்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து 40 பேர் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 2 நாட்கள் ஏற்காட்டில் தங்கியிருந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த மக்கள், மீண்டு்ம் சென்னை திரும்பியுள்ளனர்.
அப்போது ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 14வது கொண்டை ஊசி வளையில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவரில் மோதி நின்றது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறினர்.
இந்த விபத்தில் லேசான காயமடைந்த ஓட்டுநர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.