வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனின் மறைவை ஒட்டி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் இரங்கலையும், கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தினர்.
இதற்கிடையே ஸ்ரீரங்கத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் வெள்ளையனின் புகைப்படத்திற்கு ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.