சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய மேலாளருக்கு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் அனிதா ஆனந்த் என்பவர் மேலாளராகவும், தேவகி என்பவர் செயலாட்சியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தேவகியின் கார் ஓட்டுநர் தம்மை பற்றி அவதூறு பரப்புவதுடன், மிரட்டல் விடுப்பதாகவும் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலாளர் அனிதா ஆனந்த் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மேலாளருக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் தேவகிக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.