திருச்சி மாநகரில் ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் போலீசார் வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் போலீசார் அதிரடி கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ராம்ஜி நகரில் வீடு வீடாக சென்று போலீசார் நடத்திய சோதனையில், கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.