அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும்,குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டிரம்பை, கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார். இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் 67% வாக்குகளைப் பெற்று கமலா ஹாரீஸ் முன்னிலை பெற்றார். இந்நிலையில் மீண்டும் விவாதம் நடத்த கமலா அழைப்பு விடுத்த நிலையில் டிரம்ப் அதனை நிராகரித்துள்ளார்.